அறிவியல், மருத்துவ உண்மைகளை முன்னோர் சம்பிரதாயங்களாகக் கூறியுள்ளதை விளக்கும் நுால். மேலைநாட்டுக் கலாசாரம், நம் சம்பிரதாயங்களை நீர்த்துப்போகச் செய்ததாக கூறுகிறது.
மார்கழிப் பனியும், பொங்கல், சுண்டல் போன்ற பிரசாதங்களும் உடல் நலம் பேணுவதற்கென்று கூறுகிறது. பசுஞ்சாணத்தில் தயாரித்த வரட்டி, தீயில் நெய், பச்சரிசியுடன் இட்டுச் செய்யும் ஹோம புகை பற்றி விளக்குகிறது. பஞ்ச கவ்யத்தின் உயர்வு, திருநீரின் பயன்கள், பசுவின் சிறுநீர் சிறந்த பிளீச்சிங் பவுடர் என்கிறது.
மஞ்சள் மகிமையை விளக்குவதும், பெண்கள் திருமணத்தன்று மெட்டி அணிவதால் கருப்பை ஆரோக்கியம் மேம்படும் என்றும் கூறுகிறது. பயனுள்ள சிந்திக்க வைக்கும் நுால்.
- முனைவர் கலியன் சம்பத்து