பாலக்கிரக தோஷம் பற்றி வராக மிகிரர், காகபுஜண்டர், இடைக்காடர் போன்ற ஞானிகள் கூறியதை எடுத்துரைக்கும் நுால். குழந்தைகளுக்கு வயது வாரியாக ஏற்படும் தோஷங்கள் முழுதாக நீக்க பரிகாரங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.
பகைக்கிரகங்கள் ஏறுக்கு மாறாக செயலாற்றுவதாலும், நட்பு கிரகங்கள் தடைபடுவதாலும் இவை உண்டாவதாக விளக்கம் தருகிறது. பாலுாட்டும் தாய் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. தோஷம் பிடித்த குழந்தை உடல்நிலை விளக்கமாகச் சொல்லப்படுகிறது. துக்க நிவாரண பாடல் எளிய தமிழில் பாராயணம் செய்வதற்கு ஏற்ப தரப்பட்டு உள்ளது. பெண்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்