பாரதியாரின் சிந்தனைகள், வாழ்க்கை நிகழ்வுகளை விரிவான கண்ணோட்டத்தில் அலசி எழுதப்பட்டுள்ள நுால். பலகோணங்களிலான பார்வையில் வெளிவந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள, 99 தலைப்புகளும் முக்கியமானவை.
பாரதியாரின் தனிப்பட்ட வாழ்க்கை, பொதுவெளியில் பல்துறைச் செயற்பாடுகள், பாரதியார் குடும்பத்தாரோடு கொண்டிருந்த தொடர்பு பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
விடுதலை வீரர்களோடு பாரதியார் கொண்டிருந்த உறவு, பாரதியார் குறித்து அவர் மனைவி செல்லம்மாவின் தனிப்பட்ட கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. பாரதியின் தனித்துவ குணங்கள், ‘பொன்வால் நரி’ எழுதிய பின்னணி என அரிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. பாரதியார் கலைக்களஞ்சியமாக விளங்கும் நுால்.
– ராம.குருநாதன்