சென்னை நகரத்தை வரலாற்று பூர்வமாக அறிமுகம் செய்யும் நுால். வண்ணமயமாக இந்த நகரம் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக படங்களுடன் எடுத்து கூறுகிறது.
சென்னை நகரின் பல பகுதிகளில் புராதன கட்டடங்களை பார்க்கலாம். நகரின் பழமையை சொல்வதுடன், வரலாற்று பெருமையையும் காட்டும் வகையில் நிற்கின்றன. மாநகராட்சி தலைமையகம் இயங்கும் ரிப்பன் மாளிகை, கன்னிமாரா நுாலகம், ஆர்மீனியன் தேவாலயம், கபாலீஸ்வரர் கோவில், புனித ஜார்ஜ் கோட்டை உட்பட, 42 கட்டுமானங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது.
அவற்றை கட்டியதன் பின்னணி, வரலாற்று தகவல்கள், கட்டடக் கலையின் சிறப்பு அம்சங்கள், தொழில் நுட்பம் என, சிறப்புகளை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. சென்னை நகரின் வரலாற்றை சொல்லும் நுால்.
– ஒளி