தொழில் நிறுவனம் துவங்கி, சொந்த காலில் நிற்கத் துடிக்கும் எளிய மனிதர் பற்றிய நாவல்.
கதை நாயகன் பாபு நிறுவனம் துவங்க முயன்று ஏமாற்றம் மிஞ்சுகிறது. ஒரே ஆறுதல் மனைவி மட்டுமே. அவரும் ஒரு கட்டத்தில் சூழ்ச்சியால் நம்பிக்கை இழக்கிறார். பணம் படைத்தோர் பித்தலாட்டத்தால் தவிக்கிறார். இறுதியில் எடுக்கும் முடிவு வித்தியாசமானது.
கணவரின் தேடலில் பின்னடைவு ஏற்படும்போது மனைவி எப்படி சமாளிக்கிறார் என, நிஜ சம்பவங்களுடன் ஒப்பிடுகிறது. சாமானியனின் முயற்சியை காட்டும் நாவல்.
– -டி.எஸ்.ராயன்