மகாபாரதத்தில் சிறிய கதாபாத்திரமாக வந்து மிகப்பெரிய சாதனை செய்த அரவான் பற்றிய நுால். திருநங்கையரின் தெய்வமான வரலாற்றைக் கூறுகிறது.
குமுறும் எரிமலைக் குழம்பில் பிறந்து, சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றில் தவழ்ந்து, ஆவேசத்துடன் ஓடி வரும் வெள்ளத்தில் எதிர் நீச்சல் அடித்து வாழ்ந்து, வீர மரணம் அடைந்ததாக போற்றுகிறது.
தன் தலையையே வெட்டிக் கொள்ளுதல், வெட்டிய தலைக்கு உயிர் தருதல், குருஷேத்திரப் போர் காணல், மோட்சம் அடைதல் என, 35 தலைப்புகளில் அற்புதமாக அமைந்துள்ளது.
அரவம் என்றால் பாம்பு; ஆன் என்றால் மனிதன். இந்த வகையில் பெயர் சூட்டி அற்புதமாக பாத்திரம் உருவானதைக் கூறுகிறது. தலையை வெட்டி களப்பலியாகி மோட்சம் அடைந்ததைக் கூறும் வியப்பூட்டும் நாடக நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்