சிறிய கதைகளின் தொகுப்பு நுால். கல்யாணம் ஆன பின்னும் குடும்பப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு, தாயின் மடி தான் துணைக்கு வருகிறது என்பதை, ‘தலைசாய்க்க ஓர் இடம்’ என்ற கதை உணர்த்துகிறது.
வீடு கதை, நடுத்தர வருமானமுள்ளோர் வீட்டைக் கட்டி விட்டு படும் துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது. திருடன் வருவானோ, பாம்பு வருமோ என்று கவலைப்பட்டவர்களுக்கு, தந்தி வருவதற்கு தாமதமாகி பெருந்தொல்லை அளித்ததை உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டுள்ளது.
நகரத்து வாழ்க்கை எப்படியெல்லாம் துயரத்தில் ஆழ்த்துகிறது என்பதை சொல்லத் தவறவில்லை. பெண் உள்ளத்தை இன்னொருத்தி புரிந்து வைத்திருக்கிறாள் என்பதை, ‘சிவப்பு ரோஜா’ என்ற கதை விளக்குகிறது. எல்லாரையும் கவரும் படைப்பு.
– முகிலை ராசபாண்டியன்