சாணக்கியரின் சமூக நீதி, ராஜ நீதி ஆகியவற்றை விளக்கும் நுால்.
பூவின் வாசம் போல், விறகில் நெருப்பு போல் கடவுள் உடலில் உறைவதாக குறிப்பிடுகிறது. தலை எழுத்தை மாற்ற முடியாது என்கிறது. திடமான நோக்கம் உடையவன் சாதிப்பான் என்கிறது. கோபம் – எமன், காமம் – நரகம், அறிவே காமதேனு, திருப்தி தான் நந்தவனம் என அறிவிக்கிறது.
சமூகத்தில் தாயே தெய்வம்; தந்தை வழிகாட்டி. அன்பாக-, -உண்மையாக இருப்பவளே மனைவி. அடுத்தவரை ஏமாற்றாதவரே உயர் குடியினர். ராஜ குருவின் இலக்கணம், உளவு பார்த்தலின் இன்றியமையாமை, ஆலோசனை சபை, அரசன் கடமைகள், அரசு மேலதிகாரி பணிகள் விளக்கப்பட்டுள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து