முஸ்லிம்களின் மறை நுால்களை கற்று, மதபோதகராகவும், குருவாகவும் விளங்கும் சூபிகளில் சிறந்தவராக விளங்கிய ஷாஹ் வலியுல்லாஹ் வரலாற்றை விளக்கும் நுால்.
திருக்குரான் என்ற ஆன்மிக நுாலை அரபு மொழியில் இருந்து பாரசீக மொழிக்கு பெயர்த்தவர். சிறந்த ஆளுமை உடையவர். கல்வியாளர், சிந்தனையாளர் என்று போற்றப் பெற்றவர். இஸ்லாமிய மார்க்கக் கல்லுாரியை நடத்தியவர்.
இவரது வரலாற்றை வலியுல்லாஹ் பரம்பரையைச் சார்ந்தவரே வெளியிட்டுள்ளார். பிறப்பு, வளர்ப்பு, சீர்திருத்தங்கள் சேவைகள், படைப்புலகம், தினசரி வாழ்க்கை இறுதி நாட்கள் போன்ற தலைப்புகளில் விளக்குகிறது. வாழ்க்கை வரலாறு எழுதுவோருக்கு வழிகாட்டியாக அமையும் நுால். இஸ்லாம் சமய மார்க்க நெறிகளை விளக்குகிறது.
– புலவர் ரா.நாராயணன்