உலக அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உருவாக்கிய படைப்புகள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி எடுத்துரைக்கும் நுால். பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஒரான் பாமுக், எட்வர்ட் செய்த் என பலரின் ஆக்கங்கள் பற்றிய அலசலாக மலர்ந்துள்ளது.
புனைந்து எழுதும் படைப்புகள், உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை மிக அழகாக விளக்குகிறது. படைப்புகள் உருவாக்கும் தாக்கத்தால் வரலாற்றில் ஏற்படும் மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது.
உலகில் பெரும் நம்பிக்கைக்கு உட்பட்ட மகான்கள் குறித்த கற்பனை விவரிப்புகளை சுட்டிக் காட்டுகிறது. பண்பாட்டு ரீதியாக ஏற்பட்ட மோதல்களை பற்றி பேசுகிறது. வரலாற்று செய்திகள் குறித்து விவாதத்தை முன்வைக்கும் நுால்.
– ராம்