ஆரூடங்கள் பல வகைப்படும். பழங்காலத்தில் கிராமப்புறங்களில் ஆரூடம் தான் மிகப் பிரபலம். ஆரூடம் சொன்னது பலித்ததால் மக்களிடம் நம்பிக்கை மிகுந்தது. மலர் ஆரூடம், தீப ஆரூடம், கிளி ஆரூடம், சோழி ஆரூடம் என்று பல வகைகள் உண்டு என குறிப்பிடும் நுால்.
தொடும் எழுத்துக்கள், தொடும் எண்கள் வழியாக, அப்போதைக்கு அப்போது உள்ள பலன்கள் சொல்லப்படுகின்றன. புத்தகத்தில் பல வகை ஆரூடங்கள் கூறப்பட்டுள்ளன. யாருக்கு என்ன வேண்டும்? காலம் சாதகமாக இருக்குமா என ஆரூடம் பார்த்து அதன்படி நடக்கலாம். ஸ்ரீ ராமர் சக்கரம், ஸ்ரீ சீதா சக்கரம், கருட தரிசன ஆரூடமும் கூறப்பட்டுள்ளன. நம்பிக்கையுடன் படிப்பவர்களுக்கு நல்லது நடக்கும்.
– சீத்தலை ச்சாத்தன்