கலைமகள் இதழில் கேள்வி – பதில் தொகுப்பாக அமைந்துள்ள நுால். அரிய தகவல்களை தாங்கி நிற்கின்ற பதில்கள் படிப்போருக்கு பிரமிப்பை ஏற்படுத்தும்.
சாதாரண தகவல் முதல் இலக்கியம் சார்ந்த நுட்பமான கேள்விகள் வரை பல்வேறு வகையான கணைகள் உள்ளன. அவற்றுக்கு தெளிவான மற்றும் விரிவான விடைகள் வியப்பூட்டுகின்றன. பட்டினத்தார் பற்றிய கேள்விக்கு இரண்டு பட்டினத்தார் இருந்ததை பற்றிய பதில் உள்ளது. ‘தையல் சொல் கேளேல்’ என்ற வினாவுக்கு அற்புதமான விளக்கம் தரப்பட்டுள்ளது.
காவிரி நதிக்கு அப்பெயர் வந்த காரணம் சொல்லப்பட்டுள்ளது. யோசனை துாரம், அங்குலம் போன்றவற்றுக்கு அற்புதமான விளக்கம் தரப்பட்டுள்ளது. கற்றுக் கொண்டது ஏராளம் என மகிழ்வு தரும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்