தமிழ் சொற்களுக்கு பொருள் விளக்கம் தரும் அகராதி நுால். கடின தமிழ் சொற்களை புரிந்து கொள்ள ஏதுவாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த அகராதி நுால், அகர வரிசைப்படி உள்ளது. புரிந்து கொள்ள சிரமம் தரும் சொற்களை புரிய வைக்க தகுந்த சொற்களை தொகுத்து தருகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் படிக்கும் போது, ஏற்படும் ஐயங்களை அகற்ற அகராதி துணை நிற்கிறது.
வாய்மொழியாக வழி வழியாக பேசப்படும் சொற்களுக்கு பல எளிய பதங்கள் தந்து விளக்குகிறது. தமிழ் மொழியை திறனுடன் பயன்படுத்த துணை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சொற்களுக்கு பொருளை எளிதாக கண்டறியும் வகையில் உள்ளது. கெட்டி அட்டையுடன் தரமான தயாரிப்பாக உள்ள தமிழ் அகராதி நுால்.
– ராம்