தொழிலில் புதுமையைப் புகுத்தி, தனித்துவ அடையாளங்களோடு வெற்றிக்கொடி நாட்டிய 25 தொழில் அதிபர்களின் வெற்றி ரகசிய புதையலாக இலங்கும் நுால். பல்வேறு நிறுவனங்களின் வெற்றிப்படியை வரலாற்று ரீதியாக காட்டுகிறது.
வித்தை தெரிந்தவனுக்கு உலகின் எந்த மூலையிலும் வாய்ப்பு காத்திருக்கும் என பதிவிடப்பட்டிருக்கிறது. கல்விக்கும், மருத்துவத்திற்கும் வருமானத்தில், 75 சதவீதம் ஒதுக்கிய, எல் அண்ட் டி நிறுவனம் பற்றிய விபரங்கள் உள்ளன.
சராசரியாக நாள் ஒன்றுக்கு, 3 கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் எச்.சி.எல்., நிறுவனம், நடுத்தர வர்க்கத்திற்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை சாத்தியப்படுத்தும் நிறுவனம் என வரிசைப்படுத்தியுள்ளது. ஆளுமைகளை அடையாளம் காட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்