ஐம்பெரும் காப்பியங்கள், பத்துப்பாட்டு, பரிபாடல், கலித்தொகை, அகம், புறம் பற்றிய செய்திகள், திருக்குறள், நாலடியார், நந்திக்கலம்பகம், தொல்காப்பியம், நன்னுால் செய்திகளை வடித்துத் தந்துள்ள நுால்.
வாழ்வியல் முறைகளை விளக்கமாய் சொல்லும் காப்பியம் வளையாபதி. அங்கம் குறைந்த அரை குறை காப்பியம், மன்னனைப் பாடிய காலம் தன்னில் மக்களைப் பாடிய மாக்கவி இவரே என இளங்கோவடிகள் பற்றியும் குறிப்பிடுகிறது.
குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய் போல மன்னன் அன்னம் இடுவான் என, ஆற்றுப்படை குறிக்கப்பட்டுள்ளது. யாப்பும் மரபும் காட்டும் காலக்கருவி தொல்காப்பியம் என்கிறது. அகம், புறம் செய்திகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ் சோலைகளில் பூத்த மலர்களின் நறுமணம் கமழும் நுால்.
– புலவர் சு.மதியழகன்