புதுமையான முதலீடு திட்டம் பற்றிய தகவல்களை அறிமுகம் செய்யும் நுால். வங்கி சேமிப்பு, பங்கு சந்தை முதலீடு, தங்க முதலீடு போல் புதிய வழிமுறையில் உள்ளதை தெரிவிக்கிறது.
கிரிப்டோ கரன்சி என்பது என்ன? அதில் முதலீடோ, சேமிப்போ செய்வது எப்படி என்பதை எடுத்துரைக்கிறது. நவீன முறையிலான திட்டத்தில் உள்ள சாதக, பாதக அம்சங்களை அலசி கருத்துகளை முன்வைக்கிறது. பிட்காயின் என்ற நாணய முறைக்கும் விளக்கம் தருகிறது.
இது தொடர்பான சந்தை பற்றியும் தெரிவிக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் உள்ள இது போன்ற சேமிப்பு முறை பாதுகாப்பானதா என்பதை தெளிவுபடுத்துகிறது. நவீன நாணய பரிமாற்றத்தையும், முதலீட்டையும் அறிமுகம் செய்யும் நுால்.
– மதி