தத்துவக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தும் நுால். ஐரோப்பிய, அமெரிக்க ஆய்வாளர்களின் தத்துவ சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கத்தை, தத்துவக் கோட்பாடுகள் செலுத்தும் ஆளுமையை சொல்லியிருப்பது தனித்துவமாக இருக்கிறது.
அறிஞர்களின் தத்துவக் கோட்பாடுகளை எப்படி வாசிப்பது, எவ்வாறு புரிந்து கொள்வது, ஆய்வாளர்கள் கையாண்ட வாசிப்பு முறைகள் எப்படிபட்டது,
கோட்பாடுகளின் பயன்பாடு போன்ற விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. விழிப்புணர்வு, சமநிலை, புரிதல், அறிவெழுச்சி ஆகிய பண்புகள் தான் உள்ளுணர்வின் அடிப்படை என விளக்குகிறது. புதிய கோட்பாடுகளை எளிமையாக அறிமுகம் செய்யும் நுால்.
– ஊஞ்சல் பிரபு