கம்பராமாயணத்தில் கவிதை இன்பம் தரக்கூடிய பாடல்களை தொகுத்து தந்துள்ள நுால். மூலப் பாடல்களை ரசித்த அனுவத்தோடு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
பாடலைப் படித்து நேரடியாகக் கூறுவது போல் அமைந்துள்ளன. படிப்பவருக்கு பாடலின் சுவையை முழுமையாக அளிக்கவல்லது. கம்பரின் கவிநயத்தைப் புகழ்ந்து ஆங்காங்கு விளக்கம் அளிக்கிறது. மனித துன்பங்களை குறிப்பிடுகிறதா அல்லது கம்பர் வேதனைகளுக்கு உள்ளானதை தருகிறதா என வியப்பை வெளிப்படுத்துகிறது.
கம்பரின் கவிதை நயத்துக்கு 10,368 பாடல்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை சுவைக்க நினைப்போருக்கு எளிமையான விளக்கத்துடன் அமைந்த நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்