ஆங்கிலச் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
கருத்துப் புனைவு, உணர்ச்சி வெளிப்பாடு, உரையாடல் என அனைத்தும் எவரும் புரிவதற்கேற்ப எளிமை நடையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மாறுபட்ட மொழிநடை இருக்கிறது. சொல்லும் விதம் இயல்பாக உள்ளது. பொருத்தமான சொற்களால் வருணனைகள் வருடுகின்றன.
வாழ்வு நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தங்கள், ஏக்கங்கள், முரண்பாடுகள், சச்சரவு, சலிப்பு, மெலிதான மகிழ்ச்சி, ஆர்வம் எனப்பல உணர்ச்சிக்கூறுகள் கதைமாந்தர்களின் வழியே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சமூகச் சூழல் கட்டமைப்பு, நிகழ்வுகள் நடக்கும் நேரம் போன்றவை இயல்பாக விவரிக்கப்பட்டுள்ள கதை தொகுப்பு நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு