உலகில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த விழிப்பை ஊட்டும் நுால். இந்த துறையின் பாதைகள், நிறைந்துள்ள அபாயங்கள், வியூகங்கள் குறித்து அலசுகிறது. புகழ்பெற்ற தத்துவ அறிஞரால் படைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவில், ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ பற்றி விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த துறையின் வளர்ச்சி, மனித குலத்துக்கு முழு அளவில் நன்மை தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த புத்தகம் அது போன்ற சந்தேகங்களை முன் வைத்து பதில் தேடுகிறது.
மனிதனின் அறிவை கட்டுப்படுத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி சிந்தித்து கருத்துக்களை தருகிறது. மூளையை மிஞ்சும் திறனை, அறிவியல் மற்றும் தத்துவ ரீதியாக அலசி கருத்துக்களை முன்வைக்கும் நுால்.
– ஒளி