வானுயர்ந்த கட்டடங்களில் பிடிமானம் இல்லாமல் வண்ணம் பூசும் தொழிலாளியின் அசாத்திய துணிச்சலுக்குக் காரணம் வயிற்றுப் பசியே என தெளிவாக்கும் நுால். வயிற்றுப் பசி, ஞானப்பசி, காதல் பசி இவற்றில் எது வந்தாலும் மனிதன் விண்ணை தாண்டுவான் என்கிறது.
உரைநடை கவிதையில் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருளோ, போதைப் பொருளோ அல்ல; விவாதம் ஒரு பொல்லாத ஆயுதம்; தனிமையில் வாழும் மனிதன் உணவுக்கு மட்டுமல்ல உறவுக்கும் கையேந்துகிறான் போன்ற கருத்துகளை தருகிறது.
குற்றம் செய்வோர் இறைவன் பார்வையில் மன்னிப்புக்குரியவர்கள்; குயிலோசையின் இனிமையை தொலைவில் இருந்துதான் கேட்க வேண்டும்; வழக்குகள் வந்தால் விலகி நிற்பதுதான் மரியாதை என உரைக்கிறது. புதிய சிந்தனைகள் உடைய உரைநடை கவிதை நுால்.
–- புலவர் சு.மதியழகன்