தற்காப்புக்கு உதவும் சிலம்பக் கலை குறித்த விபரங்களை தொகுத்து தரும் நுால். கலை வளர்ந்த சூழல் மற்றும் அதன் வரலாற்று பின்னணியையும் தெளிவாக்குகிறது.
சிலம்பக் கலையில் நீண்ட கழி, தீப்பந்து, முச்சாண் என மூன்று வகைகள் இருப்பதை விரிவாக தருகிறது. இந்த கலைக்கு பயன்படுத்தும் கம்புகளை தேர்வு செய்வதை தனித்துவத்துடன் விளக்குகிறது. கலையில் தேர்ச்சி பெற செய்ய வேண்டிய உடற்பயிற்சி முறைகளையும் சொல்கிறது.
சிலம்பக் கலையின் ஒவ்வொரு நிலையும் தெளிவான படத்துடன் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களும் சொல்லப்பட்டுள்ளன. சிலம்பக் கலையில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதற்கான வகைமுறையையும் தெரிவிக்கும் நுால்.
– ராம்