தொழிலாளர் பாதுகாப்பு எந்த அளவு முக்கியம் என்பதை சின்னஞ்சிறு நிகழ்வு வழியாக காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மீது, மேலதிகாரிகள் எப்படி கவனம் செலுத்த வேண்டும் என்பது சொல்லப்பட்டு உள்ளது. கண்ணாடி எவ்வளவு முக்கியம் என்பதையும், ரசாயனக் குடுவைகளை எப்படி கையாள வேண்டும் என சொல்வதுடன் சுத்தம் தரும் பாதுகாப்பால் ஏற்படும் தலைமைப் பண்பு வாய்ப்பும் சொல்லப்பட்டுள்ளது.
திறமையின் படிக்கட்டு அனுபவம் தான் என்பதை விளக்குகிறது. ஒரு விபத்துக்கு காரணத்தை தெரிந்தபின், தவறு தொடர்ந்து நடக்காமல் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதை சுவையாக சொல்லும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்