நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் புதுமையாக சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சிக்கலான கதை சொல்லி, சரியான விடை சொல்லாவிட்டால் தலைபோகும் என்ற அதட்டலும், உருட்டலும் சுவாரசியமானது. உஜ்ஜயினி பட்டணத்தில் போஜராஜனுக்கு கிடைக்கும் சிம்மாசனம் கதையும், மந்திரி காசிபன் கதையும், விக்கிரமாதித்தனின் வீரம், விவேகம், தைரியம் மிளிரும் சரித்திரமும் வசீகரமாய் இருக்கிறது.
ஒவ்வொரு கதைக்கும் விக்கிரமாதித்தன் சரியான பதிலைச் சொல்வதும், வேதாளம் முருங்கை மரத்திற்கு செல்வதும் சிறப்பாக உள்ளன. வேதாளம் சுயசாப கதையை விவரிப்பதும் சுவாரசியம். இறுதியில் வேதாளத்தின் நிலைக்கு தெளிவான விடை சொல்லப்பட்டிருக்கிறது.
– ஊஞ்சல் பிரபு