பைரவர், அனுமன், விநாயகரை வழிபட்டு வந்தால் சனீஸ்வரன் ஆயுள் காலத்தை நீட்டிப்பார் என விவரிக்கும் நுால். தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜர் நடனத்திற்கும், பைரவர் காவலுக்கும் இருப்பது பற்றி கூறுகிறது.
பைரவர், 64 வித பயத்தை, 64 மூர்த்திகளாய் உருவெடுத்து போக்குவதை சொல்கிறது. அஷ்ட பைரவர்களின் யோகினிகள் குறித்தும் விவரிக்கிறது.
மார்கழி மூல நட்சத்திரத்தில் அவதரித்த அனுமனுக்கு, காயத்ரி மந்திரம் உபதேசித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமன் அவதாரம், ஏழு வடிவங்களாய் விளங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. பைரவர், அனுமன், விநாயகர் தலங்களும், புராணம், வழிபடு நேரங்களும் குறிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு பயனுள்ள நுால்.
– புலவர் சு. மதியழகன்