பாரதி குறித்து எழுதப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பு நுால். அரிய ஆக்கங்களை தேடியெடுத்து காலவரிசைப்படி அமைத்து நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது.
பாரதி தோன்றிய காலத்தை தமிழ் இலக்கிய சரிதத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார், பிரபல எழுத்தாளர் க.நா.சுப்ரமணியம். இவர் இலக்கிய வட்டம் ஆண்டு மலர், லோகோபகாரி உட்பட இதழ்களில் எழுதிய ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பாரதியின் படைப்புகளை ஆழமாக வாசித்து கருத்துக்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தொகுப்பில் இடம் பெற்றுள்ள படைப்புகள், வெளியான பழைய இதழ்களின் முகப்பு படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பாரதி குறித்த முழுமையான இலக்கிய வரலாற்று ஆவணமாக திகழும் தொகுப்பு நுால்.
– ஒளி