மரங்களை நட்டு மண்ணை செம்மைப்படுத்தும் விஞ்ஞானியின் செயல்முறையை முன்னிறுத்தியுள்ள நுால். எதற்கும் உதவாது என்று ஒதுக்கிய நிலத்தை மேம்படுத்தி வெற்றி கண்டுள்ள அனுபவம் வரலாறாக பதிவாகியுள்ளது.
மரங்கள் மீது காதலாகி அவற்றை கவனிப்பதில் பெற்ற அனுபவம் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளை எளிய நடையில் எழுத்தாக்கம் செய்துள்ளார் பத்திரிகையாளர். அது எளிதாக வாசிக்க உதவுகிறது. மரம் வளர்ப்பு சார்ந்த தொழில் நுட்பம் பெருமை மிக்கதாக பதிவாகியுள்ளது.
இயற்கையுடன் இயைந்த வாழ்வை தேர்ந்தெடுத்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு முன்னுதாரணமாக உள்ளது. சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இயற்கையின் வனப்பை, வளத்தை, எளிமையை மிக உன்னதமாக சொல்லும் நுால்.
– ஒளி