உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இலக்கணம் இருக்கிறது. அதாவது பாட்டுகளுக்கு இடையே கட்டுரை அமைந்திருக்கும். இதுவும் அப்படி அமைந்த ஒரு நுால். பாடல்கள் சிலவும், அவற்றுக்கு கட்டுரைகளும் அமைந்துள்ளன.
முதல் வரியில் உண்டு என்றும், அடுத்த வரியில் இல்லை என்றும், வார்த்தைகள் முரணாக வருவதை முரண்தொடை என்று இலக்கணத்தில் குறிப்பர். அது மாதிரி அந்தாதி என்பதற்கும் இலக்கணம் உண்டு.
இவற்றை தெளிவாக விளக்கி, திரைப்படப் பாடல்களை இணைத்து எளிதில் புரிய வைக்கிறது இந்த புத்தகம். ஒழுங்காக இருப்பது அழகு; ஒழுங்கில்லாமல் இருப்பது தான் அழகின்மை என உண்மையான இலக்கணம் சொல்லப்பட்டு உள்ளது. காமராஜர் புகழ் பாடும் கவிதை அழகாக உள்ளது. கவிஞனின் கோபம் சில இடங்களில் வெளிப்படும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்