சங்ககால பெண்களின் இல்லற மாண்பு முதல், விடுதலை போராட்டங்களில் பங்கேற்று உயிர் நீத்த பெண்கள் வரை வீரத்தையும், மாட்சிமையும் பதிவிடப்பட்டுள்ள நுால்.
காரைக்கால் அம்மையார், இசை ஞானியார் இறையருள் மேன்மையும், புராணங்களில் வரும் நளாயினி, காப்பியங்களில் கூறப்படும் ஆதிரை, இந்திரஜித் மனைவி சுலோச்சனா கற்பின் திண்மையையும் விவரிக்கிறது. காந்திஜிக்கு விடுதலை உணர்வை விதைத்த தில்லையாடி வள்ளியம்மை, அன்னிபெசன்ட் அம்மையாரின் விடுதலை உணர்வு பற்றி தெளிவுபடுத்துகிறது.
பதவிகளைத் துாக்கியெறிந்த முத்துலட்சுமி ரெட்டி, பாட்டு திறத்தாலே விடுதலை உணர்வைப் பாலித்திட வைத்த டி.கே.பட்டம்மாள் போன்ற பெண்களின் வரலாற்றை பதிவிட்டுள்ள அற்புதமான நுால்.
– புலவர் சு. மதியழகன்