முகப்பு » மாணவருக்காக » தமிழ் இலக்கணத்தேன்

தமிழ் இலக்கணத்தேன்

விலைரூ.140

ஆசிரியர் : முனைவர் மா.அய்யாத்துரை

வெளியீடு: சுய பதிப்பு

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ்மொழி இலக்கணத்தை புரிந்துகொள்ள உதவும் நுால். மாணவர்களுக்கு வழிகாட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இலக்கணம் என்ற மருந்தை தேனில் குழைத்து தருவதாக குறிப்பிடுகிறது. பள்ளியில் ஆறாம் வகுப்பு துவங்கி, 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில், இலக்கணத்தை தகுந்த மாதிரி வினா – விடை, பயிற்சி வினாக்களுடன் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி அத்தியாயங்களில் பாட விளக்கம் உள்ளது.

புரியும் வகையிலான கேள்விகளை உருவாக்கி, அவற்றுக்கு விடை தருவது போல் புரிய வைக்கிறது. ஒவ்வொரு வினா – விடையும், மொழியின் இலக்கணத்தை எளிதாக புரிந்து கொள்ள வகை செய்கிறது. தமிழ் இலக்கணத்தை கற்று மொழியை சரியாக பயன்படுத்த வழிகாட்டி உதவும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us