சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நடைமுறையை விரித்துரைக்கும் நுால்.
தற்கால வாசிப்புச் சூழலில் எந்த வகையில் எழுதுவது என்பதற்கு வழிகாட்டுகிறது. சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற வடிவங்களில் தனித்துவ நடையை கைகொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறுகிறது. காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள வேண்டியதையும் அறிவுறுத்துகிறது.
குழப்பமற்ற நேர மேலாண்மையைக் கடைப்பிடித்து இயங்குவது பற்றியும் பரிந்துரைக்கிறது. எழுத்துலகில் செயற்கை பாராட்டால் தடம்பதிக்க முடியாது என்பதற்கு அழுத்தம் தருகிறது. வாசகரை மனதில் கொண்டு மதிப்போடு எழுதும் படைப்புகள் நிலைப்பதை காட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு