இறையடியார்கள், பரமபதம் அடைய, அர்ச்சிராதி வழி கூறி, ஒன்பது படிகளை விளக்கும் நுால்.
பரமபதஸோபாநம் என்ற சொல்லிற்கு, ‘ஸ்ரீவைகுண்டமாகிய மேலிடத்திற்கு ஏறுவதற்கான படிக்கட்டு’ என பொருள் கூறுகிறது. மோட்சம், வானுலகு, நித்ய விபூதி, பேரின்ப வீடு, தெளிவிசும்பு என்ற சொற்கள், வைகுண்டத்தை சிறப்பாக குறிக்கும். அந்த வழியில் ஆன்மாவின் நற்பயணத்தை கூறுகிறது.
விவேகம், நிர்வேதம், விரக்தி, பீதி, ப்ரஸாதநம், உத்க்ரமணம், அர்ச்சிராதி, திவ்யதேச ப்ராப்தி, பராப்தி என்பவற்றை விளக்குகிறது. முதற்பகுதியில் மூன்று கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. தேவையான பகுதிகளில் ஆழ்வார் பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன. மோட்சம் அடைய வழி கூறும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து