ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை, நாச்சியார் திருமொழி கருத்துகளை, இலக்கிய- தத்துவ நோக்கில் விளக்கும் நுால். திருமாலின் ஐந்து நிலைகளையும் பாசுரங்கள் வாயிலாக தருகிறது.
திருமாலின் அவதார மேன்மைகளையும், நோக்கங்களையும், திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையழகர், திருவரங்கன் இயல்புகளையும் கூறுகிறது. திருமாலின் ஆறு குணங்கள் விளக்கப்படுகிறது. ஆண்டாள் நோக்கில் வடிவழகின் விளக்கம் உள்ளது.
பக்தி யோகத்தில் ஈடுபட்டிருக்கும் பக்தரிடம் இருக்க வேண்டிய தகுதிகள் பாசுரங்கள் வாயிலாக விளக்கப்படுகின்றன. இறைவனுடன் இருக்கும் ஒன்பது வகையான உறவுகளை அறிவிக்கிறது.- வைணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய அருமையான நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து