உயிரியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாபெரும் புரட்சிகளை எளிய தமிழில் விளக்கும் நுால். முற்றிலும் அறிவியல் பார்வையோடு எழுதப்பட்டது. டார்வினின் பரிணாமத் தத்துவமே உயிரியல் தொழில்நுட்பத்தின் அடித்தளம் என்பதை அறிய வைக்கிறது.
பரிணாமவியல், மரபியல், உயிரியல் தத்துவங்கள் வலுப்பெற்றதை விளக்குகிறது. இயற்கையின் தேர்வு கொள்கை பற்றி புரிய வைக்கிறது. மாறும் சுற்றுச் சூழலுக்கேற்ப புதிய உயிரினங்கள் தோன்றி வருவதை உணர்த்துகிறது.
கால மாற்றத்தால் உயிரினங்கள் தோன்றுவதை எடுத்துரைக்கிறது. பறவையும், பாம்பும் ஒரே மூல இனத்தில் தோன்றியவை என்பது வியப்பூட்டுகிறது. எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு