கிறிஸ்துவ மதத்தில் நிலவும் ஜாதி பிரிவினை மனப்பான்மையை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து கருத்துக்களை தொகுத்து தரும் நுால்.
செங்கல்பட்டு ராவுத்தநல்லுார் கண்டிகை துவங்கி, திண்டுக்கல் பஞ்சம்பட்டி வரை, கிறிஸ்துவ மதத்தை கடைப்பிடிப்போரிடம் ஜாதி வேரூன்றியுள்ளதை தக்க ஆதாரங்களுடன் விவரிக்கிறது. சாதாரண மக்கள் சந்திக்கும் ஒடுக்குதலை, பேட்டி, கள ஆய்வுகள் வழியாக பதிவு செய்கிறது.
ஜாதி மனநிலைக்கு எதிராக மக்களின் போராட்ட நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளது. அதற்கு எதிரான செயலுக்கு உதவுவோரின் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. கிறிஸ்துவ மதத்தில் ஜாதியை முன்வைத்துள்ள பிரிவினையை எடுத்துரைக்கிறது. மத ஒடுக்கு முறைக்கு எதிராக நியாயம் கிடைக்க உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.
– ராம்