கூட்டுக் குடும்பத்தின் பெருமையை எடுத்துரைக்கும் நாவல். குடும்பம் என்றால் பிரச்னையும் இருக்கும் என்ற வாய்ப்பாடு பொருந்துகிறது. சரளமான மொழிநடை, கதையை நகர்த்திச் செல்கிறது. தமிழ்ப் பெயர்களும், அறிவுரைகளும் எல்லா பக்கங்களிலும் நிறைந்துள்ளன.
நகை வணிகத்தில் கறாராக இருக்கும் ஒருவர், தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்கிறது. கூட்டுக் குடும்பத்தில் குழப்பத்திற்குச் சுமுகமான தீர்வு எட்டுவதை எடுத்துரைக்கிறது. பெண்ணுக்கு சமநீதி வழங்கும் தன்மையை உணர்த்துகிறது. செல்வத்தில் உயர்நிலையில் இருந்தாலும் எளிய நடைமுறையை பின்பற்ற எடுத்துரைக்கிறது.
– முகிலை ராசபாண்டியன்