நாய்களை கதாபாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
புகை பிடிக்கும் மனிதனை தாக்கிய நோய், குணாதிசயங்களை நுகர்ந்து தெரிந்து கொள்ளும் புத்திசாலித்தனத்தை கூறுகிறது. ஊரே அஞ்சுபவரை நாய் கடிக்க, அவர் எடுத்த முடிவு பற்றி பேசுகிறது. குழுவாக வாழும் நாய்களிடம் உள்ள ஒற்றுமை பற்றி பாடம் கற்பிக்கிறது.
நாய், மனிதனிடம் உள்ள குணாதிசய வேறுபாட்டை, ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்ற கருத்தாகக் கூறுகிறது. நாயுடன் நட்பில் இளைஞர்கள் எடுத்த முடிவை, ‘இளைஞர்களின் ஒற்றுமை’ கதை பகிர்கிறது. குரங்கு கூட்டத்திற்கும், சிறுத்தைக்கும் நடக்கும் பசி சிக்கலை, ‘தியாகி சிறுத்தை’ கதை கற்பிக்கிறது. குழந்தைகள் வாசிக்கத்தக்க நுால்.
– -டி.எஸ்.ராயன்