முதியோர் மனம் மகிழ்ச்சியடைய உதவும் வகையிலான நுால். முதியோர் நலத்தில் சிறப்பிடம் பெற்ற மருத்துவரால் தொகுக்கப்பட்டுஉள்ளது. என்றும் இளமைக்கு ஆறு வழிகள் என்று முதல் ஆக்கம் உள்ளது. பிரபல எழுத்தாளர் விக்டர் ஹியூகோவின் பொன்மொழியுடன் துவங்குகிறது. உடல் ஆரோக்கியம் பேண என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை மிக சுருக்கமாக தருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பும் உலகில் புகழ்பெற்ற பொன்மொழியுடன் துவங்குகிறது.
ஒவ்வொரு நிமிடத்தையும் முதியோர் அனுபவித்து வாழ வேண்டும் என அறிவுரைக்கிறது. ஓய்வுபெற்று வீட்டில் இருப்போர் என்ன செய்கின்றனர் என்பதை மிகவும் தமாசாக வெளிப்படுத்துகிறது. வாழ்வின் யதார்த்த நிலையை மிக இயல்பாக விளக்கும் நுால்.
– ஒளி