காந்திஜி முன்மொழிந்த கிராமப்புறக் கல்வி பாடத்திட்ட வரைவின் தமிழாக்க நுால்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, தொழில் முறை கல்வி, செயல் முறை கல்வி, பயிற்றுமுறை கல்வி, தாய்மொழி கல்வி பற்றிய செய்திகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டதை விரித்துரைக்கிறது. காந்திய கல்வித் திட்டத்தில், கைவினைத் தொழிற்கல்வி முக்கியத்தைப் பெறுகிறது.
ஒவ்வொரு வகுப்பிற்கான பாடத்திட்டத்தை வரையறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தாய்மொழிக் கல்வியை வற்புறுத்தும் அதே வேளையில் உருதும், ஹிந்தியும் தெரிந்திருக்க வேண்டும் என்ற சிந்தனையையும் முன்வைக்கத் தவறவில்லை.
கல்வி முறையில் மாற்றம் காணும் இந்தக் காலத்தில், காந்திய கல்வி கொள்கையை அறிய உதவும் நுால்.
– ராம.குருநாதன்