அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்நிலையை அறியத் தரும் அரிய நுால். பெரும் நெருக்கடியின் போதும் துயரங்களை சமாளிக்க போராடிய மன உறுதி, கவித்துவத்துடன் வெளிப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் மாயா ஆஞ்சலு எழுதிய சுயசரிதை எளிய நடையில் வடிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு சுவடும் வேதனை நிறைந்திருந்ததை வன்மம் இன்றி வெளிப்படுத்துகிறது. நிராசைகளையும், நம்பிக்கை கீற்றுகளுடன் எதிர்கொண்டதையும் பதிவு செய்கிறது.
நெடும்பயணத்தின் ஓட்டம் உயிர்த்துடிப்புடன் பதிவாகியுள்ளது. செயல்பாடுகள், புதிய அனுபவங்களை வெளிப்படுத்துகின்றன. நம்பிக்கையும், சகிப்பும் பெற்றுள்ள முக்கியத்துவத்தை கற்றுத் தரும் சுயசரிதை நுால்.
– மதி