கிராமங்களில் பொழுதுபோக்க நடக்கும்அற்புதமான விளையாட்டுகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சிறுவர் – சிறுமியரின் ஆளுமை வளர்ப்பு குறித்த ஆய்வாக அமைந்துள்ளது.
கிராமங்களில் சாதாரண மக்களின் விளையாட்டுகள்மறைந்து வருகின்றன. அவை தொன்றுதொட்டு ஆடப்பட்டவை. எளிய விதிமுறைகளுக்கு உட்பட்டவை. மன மகிழ்ச்சி மற்றும் அறிதலை மையமாகக் கொண்டவை. அவற்றின் நிலையை ஆய்வுப் பூர்வமாக அணுகி, கருத்துகளை பதிவு செய்துள்ளது.
சிறுவர் – சிறுமியரின் கற்பனைத்திறனை வளர்த்து, வாழ்வில் நம்பிக்கை ஊட்டுவதாகக் கூறுகிறது. பல்வேறு விளையாட்டுகள் ஆடும் முறை, பயன்படும் கருவிகளின் படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமிய விளையாட்டுகளை மீட்டுருவாக்கும் நுால்.
– ஒளி