தமிழ்மொழி சிறப்புகளை எடுத்துக் கூறும் நுால். எளிமையாகக் கற்பதற்கான தக்க உதாரண சொற்களுடன் விவரிக்கிறது.
ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் தான் உள்ளன. தமிழ்மொழிக்கு 247 எழுத்துகள் வரக் காரணம் குறித்து விளக்கி புரிய வைக்கிறது. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்துகளை உச்சரிக்கும் முறையை கூறுகிறது.
ஓசைகள் சொல்லும் தகவல்களை பகிர்கிறது. தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் உச்சரிப்பதும், ஆங்கில எழுத்துகளை தமிழில் உச்சரிப்பதில் உள்ள வேறுபாடுகளையும், மாறுபடும் அர்த்தங்களையும் விவரிக்கிறது. பண்டைய தமிழர், பருவப் பெண்களை எப்படி அழைத்தனர் என பட்டியல் இடுகிறது. உச்சரிப்பில் உள்ள பிழைகளை திருத்தி தமிழ் கற்றுக் கொள்ள உதவும் நுால்.
– -டி.எஸ்.ராயன்