இமயமலைக்கு ஆன்மிகம் தேடி சென்றவர்கள் குறித்தும், வானிலிருந்து நடத்திய பாடங்கள் குறித்தும் கூறும் நுால்.
எதிர்ப்பு சக்தி மனிதனுக்கு சிரஞ்சீவி என்ற பெயரிட்டு நெல்லிக்கனியானது என்று உணர்த்தப் படுகிறது. இறைவன், புத்தனாக, மஹாவீராக வந்தான் என்கிறது. நாகப்பட்டினத்தில் போர்ச்சுக்கீசியரால் கோவில் எழுந்த விதம் சொல்லப்பட்டுள்ளது. எதிர்ப்பு சக்தியான ராவணன் படைக்கப்பட்ட காரணமும் கூறப்பட்டுள்ளது.
உப்பின் உயர்வு, செவியின் பயன்கள், பிறப்பின் பொருள் குறித்தெல்லாம் சொல்கிறது. தர்மத்தின் சிறப்பை, அணில் கதை வாயிலாக விளக்கி, ஆன்மாவைப் பலப்படுத்த வழிகாட்டும் நுால்.
- முனைவர் கலியன் சம்பத்து