குறள் பாக்களில் உளவியல் கூறுகளை திரட்டித் தொகுத்துள்ள நுால். தனி மனித ஒழுக்கத்தை முன்வைத்து அமைந்த அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என பார்வைகளை எளிமையாக முன்வைக்கிறது.
எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன என்ற அடிப்படையில் அலசுகிறது. நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், மெய்யுணர்தல் என பல அதிகாரங்களில் குறள் பாக்களைச் சுட்டிக்காட்டி தத்துவங்களை உணர்த்துகிறது.
இன்பத்தை நாடும் இயல்புகள், துறவிகள் மனப்பாங்கு, ஊழ்வினை அச்சம், அவா அறுத்தல், நிலையாமை கோட்பாடு, ஆழமான பகையால் ஏற்படும் உளைச்சல், தீவினை விளைவுகள், தீய நட்புகளால் வரும் கேடுகள், இரக்க உணர்ச்சி சார்ந்து விளக்கப்பட்டுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு