வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதை நுால்.
முதல் கதை பிரசுரமான ஆண்டிற்கும் கடைசியில் பிரசுரமான ஆண்டிற்குமான இடைவெளி 20 ஆண்டுகள். ஒரு சேர படிக்கும் போது ஒரு காலகட்டத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அறிய முடிகிறது.
நாமக்கல் நகரை மையமாக உடைய வன்முறை கதையும், ஆற்று மணலையும், கட்டப்பஞ்சாயத்தையும் விவரிக்கும் ஆதிக்கம் கதையும், நண்பனை சந்திக்க போன இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை புனைவு கலந்து எழுதப்பட்ட கதையும் சுவாரசியமாக இருக்கின்றன.
சம்பவங்கள் படிப்பினைகளாக மாறுவதும், எக்காலத்திற்கும் பொருந்தும் பொது அம்சம் புலப்படுவதும் சிறப்பு. ஒவ்வொரு கதையும் முடியும் போது தொடர்ச்சியை உணரச் செய்கிறது. உண்மைக்கு நெருக்கமான கதைகள்.
– ஊஞ்சல் பிரபு