வரலாற்றில் குப்தர்களின் ஆட்சி, இந்தியாவின் பொற்காலம் என்பதை நிறுவும் வகையில் அமைந்துள்ள நுால். குப்தர்களின் ஆட்சி சிறப்பை உரிய ஆவணங்களின் துணையுடன் தருகிறது.
குப்தர் ஆட்சியில் நிர்வாகம், சமயம், கலை, கட்டுமானம், இலக்கியம், அறிவியல், வானியல் என பல்வேறு துறைகளில் சிறப்புற்றிருந்ததைக் காட்டுகிறது. பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு, சீரும் சிறப்புமாக ஆண்டதை கதைபோல் விவரிக்கிறது.
முதலாம் சந்திர குப்தர், சமுத்திர குப்தர் என மன்னர்களின் ஆட்சி சிறப்புகளை சொல்கிறது. பண்டைய நாணயங்கள், கல்வெட்டு செய்திகள் என ஆதாரங்களுடன் தகவல்களை பகிர்கிறது. எளிய நடையில், சுலபமாக புரியும் வகையில் செய்திகள் எழுதப்பட்டுள்ளன. பழங்கால இந்தியாவின் வரலாற்றை புரிந்துகொள்ள துணைபுரியும் நுால்.
– ஒளி