திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட பாக்யராஜ், சினிமா பற்றியும், சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலம் குறித்தும் எளிய நடையில் பகிர்ந்துள்ள நுால். கற்றுக் கொண்டது, இயக்குனருக்கு ஆலோசனைகள் கூறியது, மெருகேற்றியது போன்ற தகவல்கள் உள்ளன.
இயக்குனர் பாரதிராஜாவிடம் கற்றுக் கொண்டவை பகிரப்பட்டுள்ளது. சினிமாவை எந்த வகையில் அளித்தால் ரசிகர்கள் ஏற்பர் என்பது விளக்கப்பட்டுள்ளது.
சொந்த அனுபவங்களை சினிமாவாக்கி, பெரும் வெற்றி பெற்றுள்ளது கூறப்பட்டுள்ளது. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை சினிமாவாக்கினால், அதற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. சினிமா குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ள நுால்.
--–- முகில்குமரன்