ஜாதி, மதம், இனம், பால் வேற்றுமை கடந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டின் அருமை, பெருமைகளை கூறும் நுால். மனதை துாய்மைப்படுத்துவதே பக்தி, அன்பு செலுத்துவதே வழிபாடு என்பதை அழுத்தமாக குறிப்பிடுகிறது.
கல்வெட்டு ஆராய்ச்சி, வள்ளலார் படைப்புகள், அருட்பா அச்சிட அனுமதி கேட்டு உண்ணாவிரதம், அருட்பெருஞ்சோதி அகவல், சொற்பொழிவுகள், தனிப்பாடல்கள், உரைநடை, பதிப்புப் பணி, எழுத்து சீர்திருத்தம் என, 16 தலைப்புகளில் வள்ளலார் தமிழ் மொழி வளர்த்ததை சொல்கிறது. திருமண வீட்டில் எளிமையாக வந்த வள்ளலாரை தடுத்தபோது பாடிய தனிப்பாடல் அன்றும், இன்றும் போற்றப்படுவதை காட்டுகிறது. வள்ளலார் வளர்த்த தமிழை உள்ளத்தில் பதியும் வகையில், புதிய கோணத்தில் தரும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்