காட்டுச் சூழலில் உள்ள கோழிப் பண்ணையில் நடக்கும் போராட்டத்தை மையமாக்கி எழுதப்பட்டுள்ள கதை நுால்.
நரிக்கூட்டம் ஒன்று கோழிகளை வேட்டையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. மனமுடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் மாடம் ஒன்றை கட்டினார். நரிகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தப்பிய கோழிகள் வளர்ச்சியில் மாற்றம் உருவாகிறது. வலிமையான நரிக்கூட்டத்தை கோழிகள் வென்றதை எடுத்துக்காட்டுகிறது.
பலமும் அதிகாரமும் இல்லாத ஏழைகள் போராடுவதை சித்தரிக்கிறது. உலகப் போர்களுடன் இக்கதையை ஒப்பிட்டு பார்க்க முடியும். குழுவாகச் செயல்படுவது, தலைமைப் பண்பு, சுய உரிமை, இன உரிமை, யுத்த களத்தில் எடுக்கும் உத்திகள் பற்றி தெளிவாக குறிப்பிடும் நுால்.
– ராம்