கம்பனின் கவித்துவத்தையும், ராமாயணக் கதையையும் உயரிய நோக்கில் உரைநடை வடிவில் படைத்துள்ள நுால்.
கம்ப ராமாயண கவிதைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நயங்களை விரித்துரைப்பதோடு, பொருத்தமான குறட்பாக்களையும், அறநெறிச்சாரப் பாடல்களையும் பொருத்திக் காட்டியுள்ளமை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
கதைப்போக்கில் இடையூறு வராமல் கருத்துகளை நயம்பட எளிய நடையில் உரைக்கப்பட்டுள்ளது. கம்பன் வகுத்த ஆறு காண்டங்களிலும் உள்ள செய்திகளை சுருக்கமாக, சுவை குன்றாமல் தொடர்பு கெடாமல் பொருத்திக் காட்டி விளக்குகிறது. ஆங்காங்கே கதை தொடர்பான அழகிய ஓவியங்களும் இடம் பெற்றுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்